​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம் தனித்து போட்டி

Published : Sep 21, 2019 6:55 PM

கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம் தனித்து போட்டி

Sep 21, 2019 6:55 PM

கர்நாடகாவில் காலியாக உள்ள 15 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21ம் தேதி இடைதேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மதசார்பற்ற ஜனதா தளம் தனித்து போட்டியிட உள்ளது.

கர்நாடக மாநிலம் மைசூரில் நடைபெற்ற மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் கூட்டத்தில் பேசிய முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி, இடைத்தேர்தல் நடைபெற உள்ள அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை களமிறக்கும் பணியை தேவே கவுடா ஏற்கனவே தொடங்கி விட்டார் என கூறினார்.

மொத்தமுள்ள 15 தொகுதிகளில் 8 முதல் 10 இடங்களில் ஜனதா தளம் வெற்றியை குறிவைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பெரும்பாலான இடங்களில் வென்றும் ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்காததால், தேர்தலுக்கு பின்னர் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி வைத்து காங்கிரஸ் ஆட்சியமைத்தது.

மதசார்பற்ற ஜனதா தளம் கட்சித்தலைவர் குமாரசாமி முதலமைச்சராக பதவியேற்றார். இந்நிலையில் இந்தக் கூட்டணியின் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 15 பேர் சமீபத்தில் ராஜினாமா செய்தனர்.

இதனால் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை இழந்து குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு கவிழ்ந்தது. கர்நாடகாவில் தற்போது எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தேர்தல் ஆணையம் கர்நாடகாவில் காலியாக உள்ள 15 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை அறிவித்துள்ளது. இடைத்தேர்தலில் மதசார்பற்ற ஜனதா தளம் தங்களது முந்தைய கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர்களை எதிர்த்து அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை களமிறக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.