​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புதுச்சேரியில் பேச்சுவார்த்தைக்குப் பின் போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டம் வாபஸ்

Published : Sep 21, 2019 3:35 PM

புதுச்சேரியில் பேச்சுவார்த்தைக்குப் பின் போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டம் வாபஸ்

Sep 21, 2019 3:35 PM

புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழக ஊழியர்கள் கடந்த 5 நாட்களாக மேற்கொண்டிருந்த வேலைநிறுத்தப் போராட்டம் பேச்சுவார்த்தைக்கு பிறகு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

கடந்த 17ஆம் தேதி முதல் கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனிடையே, நேற்று அவர்களுக்கு 3 மாத ஊதியமும், கடந்த ஆண்டுக்கான போனஸ் தொகையும் வழங்கப்பட்டது.

இருப்பினும், ஒப்பந்த ஊழியர்களாக பணி செய்யும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், நிரந்தர பணியாளருக்கு  7ஆவது ஊதியக்குழு பரிந்துரைப்படி சம்பளத்தை அமல்படுத்த வேண்டும், மாத சம்பளத்தை 30ம் தேதிக்குள் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டம் 5 வது  நாளாக இன்றும் நீடித்தது. இந்நிலையில் ஊழியர்களுடன் போக்குவரத்து கழகம் சார்பில் பேச்சு நடத்தப்பட்டது. அப்போது ஒரு மாத காலத்தில் கோரிக்கைகள் மீது  நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து  ஊழியர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு பேருந்துகளை மீண்டும் இயக்க ஆரம்பித்தனர்.