​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நாட்டிலேயே தொழில் தொடங்குவதற்கு உகந்த மாநிலங்களில் 2ம் இடத்தில் தமிழகம்

Published : Sep 21, 2019 1:25 PM

நாட்டிலேயே தொழில் தொடங்குவதற்கு உகந்த மாநிலங்களில் 2ம் இடத்தில் தமிழகம்

Sep 21, 2019 1:25 PM

இந்தியாவிலேயே தொழில் தொடங்குவதற்கு உகந்த மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருப்பதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் பெண்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.8ஆக இருந்த போதிலும் தமிழகத்தின் வளர்ச்சி 8.1 ஆக உயர்ந்திருப்பதாக தெரிவித்தார். விவசாயம்,  கட்டுமானம், தகவல் தொடர்பு உள்ளிட்ட துறைகள் மூலமாக தொழில் தொடங்குவதற்கு உகந்த மாநிலமாக தமிழகம் திகழ்வதாகவும் அமைச்சர் கூறினார்.