​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சர்தார் வல்லபாய் பட்டேல் பெயரில் புதிய விருது

Published : Sep 21, 2019 6:17 AM

சர்தார் வல்லபாய் பட்டேல் பெயரில் புதிய விருது

Sep 21, 2019 6:17 AM

நாட்டின் ஒற்றுமைக்கு பாடுபட்டவர்களுக்கு சர்தார் வல்லபபாய் பட்டேல் பெயரில் விருது வழங்கி கௌரவம் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

பத்ம விருதுகளுக்கு நிகரான இந்த விருது, இந்திய குடிமகனான எந்த ஒரு தனிநபருக்கும் சாதி மத பேதமின்றி வழங்கப்படலாம் அல்லது எந்த ஒரு  நிறுவனத்திற்கும் ஒருமைப்பாட்டிற்கான பங்களிப்புக்காக வழங்கப்படலாம் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விருது பெற்றவர்களின் பெயர்கள் அரசிதழில் வெளியிடப்படும். தமது பிறந்தநாளில் நர்மதா அணைக்கரையில் உள்ள சர்தார் வல்லபபாய் பட்டேல் சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவிமரியாதை செலுத்தியதைத் தொடர்ந்து,  நாட்டின் ஒருமைப்பாட்டிற்காக பாடுபட்ட வல்லபாய் பட்டேலின் பெயரால் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.