​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புதுச்சேரி போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 3 மாத சம்பளம் மற்றும் போனஸ் தொகை இன்று வழங்கப்படும் என அறிவிப்பு

Published : Sep 20, 2019 12:55 PM

புதுச்சேரி போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 3 மாத சம்பளம் மற்றும் போனஸ் தொகை இன்று வழங்கப்படும் என அறிவிப்பு

Sep 20, 2019 12:55 PM

புதுச்சேரி போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய 3 மாத சம்பளம் இன்றே வழங்கப்படும் என புதுச்சேரி போக்குவரத்து மேலாண்மை இயக்குனர் குமார் தெரிவித்துள்ளார்.

ஊதிய பாக்கி உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 17ந் தேதி முதல் புதுச்சேரி அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அரசு பேருந்துகள் எதுவும் இயங்காமல் புதுச்சேரி மாநில மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிப்படைந்துள்ளது.

இந்த நிலையில் இது குறித்து புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்து மேலாண் இயக்குனர் குமார், போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய 3 மாத சம்பளம் மற்றும் கடந்தாண்டு வழங்கவேண்டிய போனஸ் தொகை ஆகியவை இன்றே வழங்கப்படும் என்றும், இதற்காக 5 கோடியே 80 லட்சம் ரூபாய் ஊழியர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட இருப்பதாகவும் ஆகையால் ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புமாறும் அவர் தெரிவித்துள்ளார்.