​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தலைமறைவாக இருந்த முன்னாள் காவல் ஆணையர் சிக்கினார்

Published : Sep 20, 2019 8:13 AM



தலைமறைவாக இருந்த முன்னாள் காவல் ஆணையர் சிக்கினார்

Sep 20, 2019 8:13 AM

சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பான வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த கொல்கத்தா முன்னாள் காவல்துறை ஆணையர் ராஜீவ் குமாரின் மறைவிடத்தை சிபிஐ அதிகாரிகள் கண்டுபிடித்துவிட்டனர்.

இதையடுத்து இன்று காலை 11 மணிக்கு சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது. ஆஜராக தவறினால் கைது செய்யப்படுவார் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ராஜீவ் குமாருக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை அண்மையில் கொல்கத்தா உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதனையடுத்து கைது நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காக ராஜீவ் குமார் தலைமறைவானார்.

அவரைத் தேடி சிபிஐ அதிகாரிகள் , காவல்அதிகாரிகளின் மெஸ் , 5 நட்சத்திர விடுதி, ராஜீவ்குமாரின் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனைகள் மேற்கொண்டனர். ராஜீவ் குமாரின் மறைவிடத்தை கண்டறிந்து சம்மன் அனுப்பி உள்ளனர்.