இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக ஆர்.கே.எஸ்.பதாரியாவை நியமிக்க மத்திய அரசு முடிவு
Published : Sep 19, 2019 5:35 PM
இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக ஆர்.கே.எஸ்.பதாரியாவை நியமிக்க மத்திய அரசு முடிவு
Sep 19, 2019 5:35 PM
இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக ஆர்.கே.எஸ். பதாரியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து மத்திய அரசு விடுத்துள்ள செய்தி குறிப்பில், இந்திய விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா வருகிற 30-ம் தேதியுடன் ஓய்வுபெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதையடுத்து விமானப்படையின் புதிய தளபதியாக ஆர்.கே.எஸ்.பதாரியா நியமனம் செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய விமானப்படையின் துணைத் தளபதியாக பதவி வகித்து வரும் ஆர்.கே.எஸ்.பதாரியா வருகிற 30 ஆம் தேதி இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக பதவி ஏற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.