​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
துப்பாக்கிச்சூடு நடத்தி கொலை முயற்சியை தடுத்த கனரா வங்கியின் காவலாளிக்கு டிஐஜி பாராட்டு..!

Published : Sep 19, 2019 12:02 PM



துப்பாக்கிச்சூடு நடத்தி கொலை முயற்சியை தடுத்த கனரா வங்கியின் காவலாளிக்கு டிஐஜி பாராட்டு..!

Sep 19, 2019 12:02 PM

மானாமதுரையில் துப்பாக்கிச்சூடு நடத்தி கொலை முயற்சியை தடுத்த கனரா வங்கியின் காவலாளிக்கு, இராமநாதபுரம் மண்டல டிஐஜி பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கொலை வழக்கு ஒன்றில் சிறையிலிருந்து விட்டு ஜாமீனில் வெளியே வந்த தங்கமணி என்பவர், தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அவர்கள் மானாமதுரை மரக்கடை அருகே வந்த போது 2 இருசக்கர வாகனங்களில் வந்த மர்மகும்பல், இருவரையும் வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டியதாகக் கூறப்படுகிறது.

உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடிய தங்கமணி அருகிலிருந்த கனரா வங்கிக்குள் நுழையவே, விடாமல் விரட்டிச் சென்ற கும்பல் அங்கு வைத்து அவரை கொலை செய்ய முயன்றுள்ளது.

அப்போது வங்கியின் காவலாளியான செல்ல நேரு தான் வைத்திருந்த துப்பாக்கியால் கொலை கும்பலை நோக்கி சுடவே, கொலை கும்பலில் ஒருவனுக்கு முழங்காலுக்கு கீழே குண்டு பாய்ந்தது.

இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. இந்நிலையில் தனது உயிரையும் பொருட்படுத்தாமல், துணிச்சலாக செயல்பட்டு துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை கும்பலை விரட்டியடித்த முன்னாள் ராணுவ வீரரும், வங்கியின் காவலாளியுமான செல்ல நேருவை, இராமநாதபுரம் மண்டல டிஐஜி ரூபேஷ்குமார் மீனா நேரில் அழைத்து பாராட்டினார்.

மேலும் அவரது செயலைப் பாராட்டி, பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.