​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அரசு பள்ளிகளில் இன்டர்நெட் வசதி செய்ய 463கோடி ரூபாய் ஒதுக்கீடு - அமைச்சர் செங்கோட்டையன்

Published : Apr 27, 2018 10:46 PM

அரசு பள்ளிகளில் இன்டர்நெட் வசதி செய்ய 463கோடி ரூபாய் ஒதுக்கீடு - அமைச்சர் செங்கோட்டையன்

Apr 27, 2018 10:46 PM

அரசு பள்ளியில் 9, 10, 11, 12ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு இன்டர்நெட் வசதி செய்து தருவதற்காக 463கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தமிழகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் நீட் தேர்வுப் பயிற்சி மையத்தைப் பார்வையிட்ட அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது தமிழக அரசு நீட் தேர்வுப் பயிற்சி மையங்களில் மூவாயிரத்து 146 மாணவர்கள் பயிற்சிபெற்று வருவதாகவும், இவர்களில் இரண்டாயிரம் மாணவர்கள் நீட்தேர்வில் தேர்ச்சியடைவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். 

முன்னதாகத் திருச்சியில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், இன்னும் இரண்டு மாதங்களில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அரசு சார்பில் ஐ.ஏ.எஸ் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் தொடங்கப்படும் எனத் தெரிவித்தார்.