சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச்செயலார் வைகோ, பல கட்சி ஜனநாயகம் குறித்து அமித்ஷா கூறிய கருத்துக்கு பதில் அளித்தார்.
எந்த கட்சியும் இல்லாமல் பாஜக மட்டுமே இருக்க வேண்டும் என்று அமித்ஷா எண்ணுகிறாரா என்று அவர் கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் ஒருபோதும் இந்தியை திணிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழர்கள் நன்றி மறந்தவர்கள் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறிய கருத்துக்கு உலகத்திலேயே நன்றிக்கு இலக்கணமானவர்கள் தமிழர்கள் தான் என்று வைகோ பதிலளித்தார்.
மேலும் சமஸ்கிருத்தை விட தமிழ் தான் மூத்த மொழி என்று பிரதமர் மோடி உண்மையிலேயே கருதுவாரானால் தமிழை ஆட்சி மொழியாக்கட்டும் என்று கூறினார்.