​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையரை காப்பாற்றும் கடைசி முயற்சி - கைலாஷ் விஜய்வர்கியா

Published : Sep 18, 2019 5:18 PM

கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையரை காப்பாற்றும் கடைசி முயற்சி - கைலாஷ் விஜய்வர்கியா

Sep 18, 2019 5:18 PM

கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாரை காப்பாற்றும் கடைசிக் கட்ட முயற்சியாகவே பிரதமர் மோடியை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சந்தித்துள்ளதாக பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா தெரிவித்துள்ளார்.

சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில் கொல்கத்தா முன்னாள் காவல் ஆணைரான ராஜீவ் குமாரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்கு வங்க வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் மாநிலத்தில் பெயர் மாற்றம் குறித்து ஆலோசிக்க மம்தா பானர்ஜி பிரதமரை சந்தித்துள்ளார்.

இந்நிலையில் ஒவ்வொரு விவகாரத்திலும் பிரதமர் மோடி குறித்து மம்தா பானர்ஜி, அவதூறாகப் பேசியதாகவும், பிரதமரின் பதவியேற்பு விழா, நிதி ஆயோக் மற்றும் முதலமைச்சர்கள் கூட்டங்களில் பங்கேற்க மறுத்தாகவும் தெரிவித்த கைலாஷ் விஜய் வர்கியா தற்போது மட்டும் பிரதமரை சந்திப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமார் சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில் கைதானால், தனது அமைச்சரவையில் பாதிப் பேர் சிக்கிக் கொண்டு சிறைக்கு செல்லும் நிலை ஏற்படும் என்ற அச்சத்தாலேயே மம்தா பானர்ஜி பிரதமரை சந்திப்பதாகவும் அவர் கூறினார்.