​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கட்டணம் செலுத்தவில்லை என்று வெளியேற்றப்பட்ட மாணவி மீண்டும் அதே பள்ளியில் சேர்ப்பு

Published : Sep 18, 2019 12:51 PM

கட்டணம் செலுத்தவில்லை என்று வெளியேற்றப்பட்ட மாணவி மீண்டும் அதே பள்ளியில் சேர்ப்பு

Sep 18, 2019 12:51 PM

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் கட்டணம் செலுத்தவில்லை என்று கூறி வெளியேற்றப்பட்ட மாணவி மீண்டும் அதே பள்ளியில் கட்டணமின்றி சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பொதுமக்களுக்கு 3 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் கே.சி.கருப்பண்ணன் வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையனிடம் தனியார் பள்ளியில் கட்டணம் செலுத்தவில்லை என்று கூறி மாணவி வெளியேற்றப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் கட்டணமின்றி மீண்டும் அதே பள்ளியில் மாணவி சேர்க்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பதிலளித்தார்.

மேலும் இதுபோன்று தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தால் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் விளக்கமளித்தார்.