​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பரூக் அப்துல்லா பாதுகாப்பு சட்டத்தில் கைது குறித்து ராகுல் கருத்து

Published : Sep 18, 2019 7:34 AM

பரூக் அப்துல்லா பாதுகாப்பு சட்டத்தில் கைது குறித்து ராகுல் கருத்து

Sep 18, 2019 7:34 AM

தேசிய தலைவர்களை நீக்கிவிட்டு அரசியல் வெற்றிடத்தை ஏற்படுத்த மோடி தலைமையிலான பாஜக அரசு முயற்சித்து வருவதாக காங்கிரஸ் கட்சியின் எம்பி ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

காஷ்மீரில் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லாவை ஒருமாதத்திற்கும் மேலாக தடுப்புக் காவலில் அடைத்து வைத்திருந்த நிலையில் திடீரென தேசிய பாதுகாப்பு சட்டத்தில் மத்தியஅரசு கைது செய்து அவர் வீட்டையே துணை சிறையாக மாற்றியுள்ளது.

83 வயதான ஒரு தேசிய தலைவர் எப்படி நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்க முடியும் என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியது.

இதனைத் தொடர்ந்து தமது கருத்தை பதிவு செய்துள்ள ராகுல் காந்தி, பரூக் அப்துல்லா போன்ற மூத்த தேசிய தலைவர்களை நீக்கிவிட்டு அரசியல் வெற்றிடத்தை ஏற்படுத்த முயற்சி நடைபெறுவதாக சாடினார். இந்தியாவில் மதரீதியான பிளவை ஏற்படுத்த காஷ்மீரை ஒரு கருவியாக பயன்படுத்தவும் சதி நடப்பதாகவும் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.