​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சீர்காழி மற்றும் ஓசூரில் பலத்த மழை..!

Published : Sep 18, 2019 7:27 AM



சீர்காழி மற்றும் ஓசூரில் பலத்த மழை..!

Sep 18, 2019 7:27 AM

நாகை மாவட்டம் சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக கன மழை பெய்துள்ளது.

காலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் மாலையில் சீர்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன்கோவில் உள்ளிட்ட கனமழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளான ,மத்திகிரி,கெலமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிரவு பலத்த மழை பெய்தது. இதனால் சாலையில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.