​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமார் விசாரணைக்கு ஆஜராகவில்லை

Published : Sep 17, 2019 7:35 PM

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமார் விசாரணைக்கு ஆஜராகவில்லை

Sep 17, 2019 7:35 PM

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாத கொல்கத்தா நகர முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாரை கைது செய்ய சி.பி.ஐ. தனிப்படை அமைத்துள்ளது.

மேற்கு வங்காள மாநிலத்தில் சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கை முறையாக விசாரிக்கவில்லை எனக்கூறி, கொல்கத்தா காவல் ஆணையராக இருந்த ராஜீவ் குமாரை சி.பி.ஐ விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தது.

அவரை சிபிஐ கைது செய்வதற்கான தடையை கொல்கத்தா நீதிமன்றம் கடந்த 13-ம் தேதி விலக்கிக் கொண்டது.

இதையடுத்து, விசாரணைக்காக காலை 10 மணிக்குள் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமார் வீட்டுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.


இந்நிலையில், சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாததால், ராஜீவ் குமாரை கைது செய்ய சி.பி.ஐ. அதிகாரிகள் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

இதற்கிடையில், ராஜீவ் குமார் தரப்பில் கொல்கத்தா நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரிக்கும் நீதிமன்ற எல்லை இதுவல்ல என குறிப்பிட்ட நீதிபதி, மனுவை
தள்ளுபடி செய்தார்.