​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சவூதி கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது

Published : Sep 17, 2019 6:24 PM

சவூதி கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது

Sep 17, 2019 6:24 PM

சவூதி  கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சவூதி அரசின் எண்ணெய் நிறுவனமான அரம்கோவின் இரு கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மீது அண்மையில் டிரோன் மூலமாக  வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது.

தீயை உடனடியாக நிறுவனம் அணைத்த போதிலும், மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும்  உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால்,  கச்சா எண்ணெய் விலையும் வரலாறு காணாத அளவுக்கு  உயர்ந்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு ஏமன் கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றிருந்த நிலையில், தாக்குதலுக்கு ஈரான் தான் காரணம் எனவும், இருப்பினும் தான் போரை தவிர்க்க விரும்புவதாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்  கூறியிருந்தார்.

இந்நிலையில், பொருளாதாரம் மற்றும் எரிசக்தி பொருள் தேவைக்காக மத்திய கிழக்கு நாடுகளான ஈரான், சவூதியுடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ள சீனா, தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில்  செய்தியாளர்கள் சந்திப்பின் போது இதனை பதிவிட்ட சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின்  செய்திதொடர்பாளர்  தாக்குதல் தொடர்பாக உறுதியான தகவல்கள் இல்லாமல் யாரையும் குற்றஞ்சாட்ட விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.