​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மரங்களை பாதுகாக்கும் சட்டத்தை முறையாக அமல்படுத்துவதில் தீவிரம் காட்டாதது ஏன் -உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

Published : Sep 17, 2019 6:16 PM

மரங்களை பாதுகாக்கும் சட்டத்தை முறையாக அமல்படுத்துவதில் தீவிரம் காட்டாதது ஏன் -உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

Sep 17, 2019 6:16 PM

பிற மாநிலங்களைப் போல் மரங்களை பாதுகாக்கும் சட்டத்தை முறையாக அமல்படுத்துவதில் தீவிரம் காட்டாதது ஏன் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. 

மதுரை காளவாசல் பகுதியில் இருந்து வரும் வாகனங்களும் பழங்காநத்தம் பகுதியில் இருந்து வரும் வாகனங்களும் காளவாசல் சந்திப்பை போக்குவரத்து நெரிசலின்றி கடந்து செல்ல உயர்மட்ட பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.

அதே சமயம் புறவழிச்சாலையை அகலப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்த புறவழிச்சாலையில் 30 ஆண்டுகள் பழமையான மரங்கள் உள்ளன.

இந்த நிலையில் விரிவாக்கப் பணிகளுக்காக காளவாசல் சந்திப்பில் இருந்து குரு தியேட்டர் சந்திப்பு வரை அரசரம், வேப்ப மரம், உள்ளிட்ட பல வகை மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன.

இது தொடர்பாக மதுரை செல்லூரைச் சேர்ந்த குபேந்திரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கை தாக்கல் செய்தார்.

காளவாசல் பகுதியில் இருந்து குரு தியேட்டர் வரை சாலையின் இருபுறங்களிலும் உள்ள மரங்களை வெட்ட இடைக்கால தடை விதிக்கவும்  மரங்களை வெட்டுவது தொடர்பாக முறையான விதிகளை உருவாக்கவும், மரங்களை வேரோடு எடுத்து வேறு இடத்தில் நடும் நவீன இயந்திரங்களை பயன்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு  சிவஞானம் தாரணி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் 138 மரங்களில் 80 மரங்கள் ஏற்கனவே வெட்டப்பட்டுவிட்டதாக தெரிவித்தார்.

இதையடுத்து பிற மாநிலங்களைப் போல மரங்களை பாதுகாக்கும் சட்டத்தை முறையாக அமல்படுத்துவதில் தமிழக அரசு ஏன் தீவிரம் காட்டுவதில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும் இந்த வழக்கில் நிழல்கள் அறக்கட்டளையை எதிர்மனுதாரராக சேர்த்த நீதிபதிகள், காளவாசல் முதல் குருதியேட்டர் வரையுள்ள மீதமுள்ள மரங்களை வேரோடு எடுத்து வேறு இடத்தில் வைக்க இயலுமா என்பது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தவிட்டு வழக்கை செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.