​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிவில் நீதிபதிகள் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்

Published : Sep 17, 2019 3:31 PM

சிவில் நீதிபதிகள் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்

Sep 17, 2019 3:31 PM

தமிழகத்தில் சிவில் நீதிபதிகள் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் இலவசமாக நடத்தவுள்ளதாக அதன் தலைவர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் காலியாக உள்ள 176 சிவில் நீதிபதிகள் தேர்வுக்கான அறிப்பாணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இந்த தேர்வில் பங்கேற்கும் வழக்கறிஞர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சிலும், மனித நேய பயிற்சி நிறுவனமும் இணைந்து பயிற்சி வகுப்புகள் நடத்த உள்ளன.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ். அமல்ராஜ், பணியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், பேராசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்த உள்ளதாக தெரிவித்தார். இதற்காக பார்கவுன்சில் தனி செல்போன் செயலியை உருவாக்கி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.