​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வீட்டின் முன்பகுதியை உருக்குலைத்த டிப்பர் லாரி..!

Published : Sep 17, 2019 2:51 PM

வீட்டின் முன்பகுதியை உருக்குலைத்த டிப்பர் லாரி..!

Sep 17, 2019 2:51 PM

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே, சாலையில் சென்றுகொண்டிருந்த டிப்பர் லாரி ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த வீட்டின் மீது மோதியதில் வீட்டின் முன்பகுதி உருக்குலைந்தது.

திருச்செந்தூர் அருகேயுள்ள ஆற்றின்கரை பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்த குருசாமி என்பவர், திருச்செந்தூர் பகுதியிலிருந்து டிப்பர் லாரியில் எம்.சாண்ட் ஏற்றிக்கொண்டு, கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை பகுதி நோக்கி சென்றுள்ளார்.

பார்த்திவபுரம் பகுதியில் உள்ள ஆபத்தான வளைவு பகுதியை லாரி அடைந்தபோது, எதிரே வந்த வாகனம் கடந்து செல்வதற்கு ஏதுவாக லாரியை ஒரு புறமாக அவர் ஒதுக்கியதாக கூறப்படுகிறது.

அப்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி, மேடான சாலையிலிருந்து தாழ்வான பகுதியில் பக்கவாட்டாக சாய்ந்து, அங்கிருந்த வீட்டின் முன் பகுதியில் பலமாக மோதியது. இதில், லாரி ஓட்டுநருக்கு காயம் ஏற்பட்ட நிலையில், வீட்டின் முன்பகுதி இடிந்து உருக்குலைந்தது.

விபத்து நடந்தபோது, வீட்டில் யாரும் இல்லாததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்துவந்த மீட்பு படையினர், இடிபாடுகளுக்குள் சிக்கிக்கிடந்த லாரி ஓட்டுநரை சுமார் ஒன்றரை மணி நேரம் போராடி மீட்டு வெளியில் கொண்டுவந்தனர்.

லாரி ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.