​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன்

Published : Sep 17, 2019 1:54 PM



திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன்

Sep 17, 2019 1:54 PM

நிலமோசடி புகாரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அரக்கோணம் தொகுதி திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு, சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

சென்னை குரோம்பேட்டைக்கு அந்த பெயர் வரக் காணமான குரோம் லெதர் தொழிற்சாலைக்கு சொந்தமாக இருந்த நிலங்கள், 1982-ஆம் ஆண்டில் எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் நகர்ப்புற நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் அரசுடைமையாக்கப்பட்டது.

அந்த நிலங்களை நீராதாரங்களுக்கு பயன்படும் வகையில் 1984ஆம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிலையில், 1996ஆம் ஆண்டில் குரோம் தோல் தொழிற்சாலை சேர்மனாக இருந்த ஜெகத்ரட்சகன், 1.55 ஏக்கர் நிலத்தை, நகர்ப்புற நிலஉச்சவரம்பு சட்டத்தின் விதிகளை மீறி, 41 பயனாளிகளுக்கு பிரித்துக் கொடுத்துள்ளார்.

நீராதாரங்களுக்கு பயன்படும் வகையில் ஒதுக்கப்பட்ட நிலத்தை, தெரிந்தவர்களுக்கும் உறவினர்களுக்கும் நிலத்தை பிரித்துக் கொடுத்துவிட்டதாக ஜெகத்ரட்சகன் மீது புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக தொடரப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் புகார் குறித்து விசாரிக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார், புகார் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. வரும் 23ஆம் தேதி, சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஜெகத்ரட்சகன் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.