​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பேனரை, அகற்ற முயன்ற மாநகராட்சி ஊழியர்களை தாக்கியதாக மதிமுக நிர்வாகி கைது

Published : Sep 17, 2019 12:50 PM



பேனரை, அகற்ற முயன்ற மாநகராட்சி ஊழியர்களை தாக்கியதாக மதிமுக நிர்வாகி கைது

Sep 17, 2019 12:50 PM

உயர் நீதிமன்ற உத்தரவை மீறி வைக்கப்பட்ட பேனரை, அகற்ற முயன்ற மாநகராட்சி ஊழியர்களை தாக்கியதாக மதிமுக நிர்வாகியை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 111 வது பிறந்தநாள் விழா மாநாடு நடைபெற்றது. விழாவிற்காக சைதாப்பேட்டை டாடண்டர் நகரில் மதிமுக கட்சி கொடிகம்பங்கள் மற்றும் சிறிய அளவிலான பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன.

பேனர்கள் தொடர்பாக உயர்நீதிமன்றம் கடும் உத்தரவுகள் பிறப்பித்துள்ள நிலையில் மாநகராட்சி செயற்பொறியாளர் வரதராஜன், மற்றும் ஊழியர்கள் திவாகர் மற்றும் கண்ணன் ஆகியோர் அவற்றை அகற்றி உள்ளனர். அப்போது அங்கு வந்த மதிமுக தொண்டர்கள் மாநகராட்சி அதிகாரி மற்றும் ஊழியர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக உதவி செயற்பொறியாளர் ஸ்ரீதர் அளித்த புகாரின் பேரில், சைதாப்பேட்டை போலீசார், மதிமுக தென்சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியை கைது செய்துள்ளனர். அவர் மீது காயம் ஏற்படுத்துதல், ஆபாசமாக திட்டுதல், ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே மதிமுக அலுவலகத்தில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த பின்னர் பொதுசெயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் கூறுகையில், மதிமுக கொடிகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றியதில் ஏற்பட்ட கைகலப்பை மாவட்ட செயலாளர் சுப்பிரமணி விலக்கி விடச் சென்றார் என்றார்.