​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆந்திரா முன்னாள் சபாநாயகர் மரணத்தில் சந்தேகம் என்று உறவினர் குற்றச்சாட்டு

Published : Sep 17, 2019 12:19 PM



ஆந்திரா முன்னாள் சபாநாயகர் மரணத்தில் சந்தேகம் என்று உறவினர் குற்றச்சாட்டு

Sep 17, 2019 12:19 PM

ஆந்திரா முன்னாள் சபாநாயகரான கோடல்ல சிவ பிரசாத் ராவ் உயிரிழப்பை சந்தேகத்திற்கு இடமான மரணம் என்று போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தெலுங்கு தேச கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான 72 வயது சிவ பிரசாத் ராவ் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் இது தற்கொலை இல்லை கொலை என்று சிவ பிரசாத் ராவின் உறவினர் காஞ்சி சாய் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். ராவ் தற்கொலை செய்து கொண்டார் என்பதை நம்பமுடியவில்லை என்றும் உறவினர்கள், நண்பர்கள் கூறுவதை வைத்து பார்க்கும்போது அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றே தெரிகிறது என்றும் காஞ்சி சாய் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தனது மகனால் உடல் மற்றும் மனதளவில் ராவ் சித்திரவதை அனுபவித்து வந்ததாகவும், அவரது மகனால் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் உறவினர் காஞ்சி சாய் தெரிவித்துள்ளார்.

முதலில் தற்கொலை என கூறிய போலீசாரும் காஞ்சி சாய் குற்றஞ்சாட்டை தொடர்ந்து, சந்தேகப்படும் வகையிலான மரணம் என்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தற்கொலை செய்திருக்க வாய்ப்புள்ளதாக ராவின் உடற்கூராய்வு அறிக்கை கூறும்நிலையில் அவரது உடலில் விஷம் கலந்துள்ளதா என்று கண்டறிய தடயவியல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அதன் முடிவுக்காக தற்போது காவல்துறையில் காத்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சபாநாயகராக இருந்தபோது சட்டசபையில் உள்ள பொருட்களை தனது அலுவலகத்துக்கு எடுத்துச் சென்றதாக ராவ் மீது புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது-