​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு

Published : Sep 17, 2019 8:12 AM



மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு

Sep 17, 2019 8:12 AM

சென்னை தாம்பரம் அருகே தெரு நாய்களுக்கு உணவு அளிக்க சென்றவர்மீது மின்கம்பி சாய்ந்ததில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். 

சென்னை தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கம் சாரங்கன் அவென்யூ கல்யாணசுந்தரம் தெருவை சேர்ந்த சேது என்பவர் அதே பகுதிதில் மினி ஆட்டோ மூலம் தண்ணீர் கேன் வியாபாரம் செய்து வருகிறார்.

நேற்றிரவு வழக்கம் போல் உணவு அருந்திவிட்டு மீதமுள்ள உணவை வீட்டிற்கு வெளியே இருந்த சேதமடைந்த சிமெண்ட் மின் கம்பம் அருகே தெரு நாய்களுக்கு வைப்பதற்காக சென்றார்.

அப்போது திடீரென அந்த மின் கம்பம் உடைந்து மின்கம்பி அறுந்து விழுந்ததால் மின்சாரம் பாய்ந்து படுகாயம் அடைந்தார். தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சேதமடைந்த நிலையில் அங்கு பல மின்கம்பங்கள் இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கருவேப்பிலங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த கொளஞ்சி என்ற இளைஞர் ஆடு மேய்க்க செல்லும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். சத்தியவாடியில் உள்ள வயல்பகுதியில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த தால் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நேற்று முன்தினம் முகலிவாக்கத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் ஒருவன் உயிரிழந்த நிலையில், மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

மின்சாரம் தாக்கிய சேதுவை தனியார் மருத்துவமனையில் இருந்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வராது என்று 108 சேவை மைய ஊழியர் கூறும் ஆடியோ வெளியாகியுள்ளது.

சிட்லப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேதுவுக்கு சிகிச்சை அளிக்க இயலாது என்று கூறிவிட்டதால் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல அவரது மனைவி 108 சேவை மையத்துக்கு தொடர்பு கொண்டுள்ளார். அப்போது பேசிய உதவி மைய ஊழியர், தனியார் மருத்துவமனைக்கு எல்லாம் 108 ஆம்புலன்ஸ் வராது என்றும் தனியார் வாகன சேவையை அணுகுமாறு கூறியதாகவும் ஆடியோ பதிவு வெளியாகியுள்ளது.