​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவகுமார் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

Published : Sep 17, 2019 7:59 AM

கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவகுமார் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

Sep 17, 2019 7:59 AM

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் இன்று டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

கடந்த 2017ம் ஆண்டில் இவரது டெல்லி வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட 8 கோடியே 59 லட்சம் ரூபாய் தொடர்பாக 4 நாட்கள் விசாரணை நடத்திய அமலாக்கத்துறையினர் கடந்த 3ந் தேதி அவரை கைது செய்தனர்.

சிவகுமாரிடம் விசாரணை நடத்துவதற்காக முதலில் 9 நாட்களும், பின்னர் 4 நாட்களை நீடித்தும் டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. காவல் நிறைடைவதால் இன்று மாலை அவர் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

காவலின்போது 2 நாட்கள் உடல்நலக்குறைவு காரணமாக சிவக் குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்த முடியவில்லை. எனவே இதை காரணம் காட்டி விசாரணைக்காக காவலை நீட்டிக்குமாறு நீதிமன்றத்தில் வலியுறுத்த அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சிவக்குமாரின் ஜாமீன் மனுவும் இன்று விசாரணைக்கு வருவதால் அவருக்கு ஜாமீன் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் அவரது குடும்பத்தினர் உள்ளனர்.