​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கன மழை பெய்தது.

Published : Sep 16, 2019 7:53 PM

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கன மழை பெய்தது.

Sep 16, 2019 7:53 PM

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கன மழை பெய்தது.

தேனி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான ஆண்டிபட்டி ,பெரியகுளம், போடி உள்ளிட்ட பகுதிகளில் கன மழை வெளுத்து வாங்கியது.

காலையில் வெயிலின் தாக்கம் மிகுதியாக இருந்த நிலையில் மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு கனமழை பெய்தது.

கொட்டித் தீர்த்த கன மழையால் விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கன மழை பெய்தது.

குத்தாலம், தரங்கம்பாடி, மணல்மேடு உள்ளிட்ட பகுதியில் மாலை நேரத்தில் மழை கொட்டித் தீர்த்தது.

சம்பா பயிர்க்கான ஆரம்ப கட்ட பணிகள் தற்போது நடைபெற்றுவரும் நிலையில் இந்த மழை பெய்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். 

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், ஜக்காம்பேட்டை, பெரமண்டூர், கூட்டேரிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

மாலை நேரத்தில் மழை பெய்ததால் பள்ளி, கல்லூரிகள், மற்றும் அலுவலகங்களிலிருந்து வீடு திரும்ப இருந்தோர் சிரமத்திற்கு ஆளாகினர். தொடர்ந்து இரு தினங்களாக இப்பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. காலையில் வெயில் வாட்டிய நிலையில் மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

இதனையடுத்து தருமபுரி மற்றும் அதனை சுற்றி உள்ள அன்னசாகரம், வெண்ணாம்பட்டி, பாரதிபுரம், அரூர்,பென்னாகரம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. மழையால் குளுமையான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.