​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்தி திணிப்பை எதிர்த்து செப்டம்பர் 20 ஆம் தேதி தி.மு.க. போராட்டம் அறிவிப்பு

Published : Sep 16, 2019 6:50 PM

இந்தி திணிப்பை எதிர்த்து செப்டம்பர் 20 ஆம் தேதி தி.மு.க. போராட்டம் அறிவிப்பு

Sep 16, 2019 6:50 PM

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இந்தித் திணிப்பு கருத்தை கண்டித்து மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் அந்த கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியாவின் அடையாளமாக ஒரே ஒரு மொழிதான் இருக்க வேண்டும், இந்தி தான் அந்த அடையாளத்தை கொடுக்கும் என்று அமித் ஷாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவிப்பது என்றும், மோடி தலைமையிலான மத்திய அரசு, இந்தி திணிப்பில் ஈடுபட்டு, இந்தியாவை இந்தி மயமாக்க திட்டம் தீட்டிச் செயல்பட்டு வருவது கவலை அளிப்பதாகவும் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்தி மட்டுமே இந்தியாவின் அடையாளம் என்ற கூறி மாநிலங்களின் மொழி உணர்வை அவமதித்துள்ள அமித் ஷா தனது கருத்தை திரும்ப பெற வேண்டும் என்றும், இந்த கருத்தை கண்டித்து 20-ஆம் தேதி காலை 10 மணி அளவில் தமிழகத்தில் உள்ள அனைத்து வருவாய் மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.