​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அயோத்தி வழக்கு விசாரணையை நேரலையில் ஒளிபரப்புவது சாத்தியமா?

Published : Sep 16, 2019 3:38 PM

அயோத்தி வழக்கு விசாரணையை நேரலையில் ஒளிபரப்புவது சாத்தியமா?

Sep 16, 2019 3:38 PM

அயோத்தி வழக்கு விசாரணையை நேரலையில் ஒளிபரப்புவது சாத்தியமா? என்று நீதிமன்றப் பதிவாளரிடம் உச்சநீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது.

 உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இருந்த 2.77 ஏக்கர் நிலம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான வழக்கில் மத்தியஸ்த முயற்சி தோல்வி அடைந்தது.

இதை அடுத்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட்,எஸ்.ஏ. போப்டே,  அசோக் பூஷன்மற்றும் அப்துல் நசீர்  ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வழக்கின் விசாரணை நாள்தோறும் நடைபெற்று வருகிறது.

ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் விசாரணையை நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் எனக் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.


தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு என்பதால், கோடிக்கணக்கானோர் விசாரணையைப் பார்ப்பதற்கு விரும்புவதாக மனுவில் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.


இதை விசாரித்த 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, வழக்கு விசாரணையை நேரலையில் ஒளிபரப்புவது சாத்தியமா? என்று பதிவாளரிடம் விளக்கம் கேட்டது.

மேலும், நேரலையில் ஒளிபரப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய எவ்வளவு காலம் ஆகும் என்றும் பதிவாளரிடம் நீதிபதிகள் விளக்கம் கேட்டுள்ளனர்.