​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஜாமினில் வெளிவந்துள்ள பேராசிரியை நிர்மலா தேவி, 27ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

Published : Sep 16, 2019 2:46 PM

ஜாமினில் வெளிவந்துள்ள பேராசிரியை நிர்மலா தேவி, 27ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

Sep 16, 2019 2:46 PM

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கூறி கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்துள்ள பேராசிரியை நிர்மலா தேவி, வழக்கு தொடர்பாக வருகிற 27ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கூறி தொடரப்பட்ட வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர். உதவி பேராசிரியர் முருகன் ஆஜராகவில்லை. வழக்கமாக காரில் வரும் நிர்மலாதேவி இன்று, தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகனத்தில் வந்திருந்தார்.

பின்னர் வழக்கை விசாரித்த நீதிபதி, 3 பேரும் வருகிற 27ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நிர்மலாதேவியின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன், நிர்மலா தேவி மீது தொடரப்பட்ட வழக்கு ஜோடிக்கப்பட்ட ஒன்று என தெரிவித்தார்.

சிறையில் அனுபவித்த தனிமை மற்றும் கொடுமை காரணமாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்த நிர்மலா தேவி, உரிய சிகிச்சைக்கு பின்பு தற்போது நலமுடன் இருப்பதாகவும் கூறினார்.