​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 14ஆக அதிகரிப்பு..!

Published : Sep 16, 2019 12:28 PM

கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 14ஆக அதிகரிப்பு..!

Sep 16, 2019 12:28 PM

ஆந்திராவில் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது.

கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் பாப்பிகொண்டல பகுதியில் உள்ள கோதாவரி ஆற்றில் நேற்று சுற்றுலா படகு ஒன்றில் 71 பேர் பயணம் செய்தனர். அப்போது அந்த படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 71 பேரும் நீரில் மூழ்கினர்.

அவர்களில் 27 பேரை கோதாவரி நீச்சல் படையினர் பத்திரமாக மீட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நீரில் அடித்துச் செல்லப்பட்டவர்களில் 14 பேர் உயிரிழந்து விட்டதாக அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் 8 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. எஞ்சியோரை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. இதனிடையே, கோதாவரி ஆற்றில் நடைபெறும் மீட்புப் பணியை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்தார்.

மேலும், படகு விபத்தில் மீட்கப்பட்டு ராஜமந்திரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளவர்களையும் அவர் நேரில் சென்று ஆறுதல் தெரிவிக்க திட்டமிட்டுள்ளார்.