​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கடலில் குளிக்க சென்ற 2 மாணவர்கள் நீரில் மூழ்கி பலி

Published : Sep 16, 2019 10:52 AM



கடலில் குளிக்க சென்ற 2 மாணவர்கள் நீரில் மூழ்கி பலி

Sep 16, 2019 10:52 AM

சென்னை பாலவாக்கம் கடலில் குளித்த இரண்டு கல்லூரி மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

சென்னை தரமணி பகுதியைச் சேர்ந்த 4 கல்லூரி மாணவர்கள் உட்பட 5 பேர், விடுமுறை நாளான நேற்று சென்னை பாலவாக்கம் கடற்கரைக்கு குளிக்க சென்றுள்ளனர். 5 பேரும் செல்பி எடுத்தப்படி உற்சாகமாக குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக, ஜெகன் என்ற 19 வயது இளைஞர் ராட்சத அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டார்.

இதை பார்த்த அவரது நண்பர் 20 வயதான ஆகாஷும், ஜெகனை காப்பாற்றும் முயற்சியில் கடலுக்குள் மூழ்கினார். இதையடுத்து, உடன் வந்த நண்பர்கள் தீயணைப்பு நிலையத்திற்கும், மீனவர்களுக்கும் தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர்களும், மீனவர்களும் நீரில் மூழ்கிய இருவரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

சிறிது நேர தேடுதலுக்கு பிறகு, ஜெகன் சடலமாக மீட்கப்பட்டார். அதேபோல் ஆகாஷை தேடி வந்த நிலையில், அவரது உடல் கொட்டிவாக்கம் கடற்கரையில் ஒதுங்கியது. இருவரின் உடலையும் கைப்பற்றிய நீலாங்கரை போலீஸார், பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.