​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி

Published : Sep 16, 2019 7:38 AM

ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி

Sep 16, 2019 7:38 AM

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இரு அணிகளும் மோதிய 5-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் கடந்த 12-ந்தேதி தொடங்கியது.

முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 294 ரன்களும், ஆஸ்திரேலியா 225 ரன்களும் எடுத்தன.

2வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 329 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 399 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 2வது இன்னிங்சைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி எதிரணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது.

இறுதியில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 263 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2க்கு 2 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.

1972-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக ஆஷஸ் தொடர் சமன் ஆகியுள்ளது. நடப்பு சாம்பியன் என்ற வகையில் ஆஷஸ் கோப்பையை ஆஸ்திரேலியா தக்க வைத்துக் கொண்டது.