​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகத்தில் 3 நாட்கள் பரவலாக மழைக்கு வாய்ப்பு

Published : Sep 16, 2019 6:44 AM

தமிழகத்தில் 3 நாட்கள் பரவலாக மழைக்கு வாய்ப்பு

Sep 16, 2019 6:44 AM

தமிழகத்தின் 15 மாவட்டங்களில் மூன்று நாட்கள் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வடதமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

மற்ற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.