​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கங்கை நதியில் வெள்ளப்பெருக்கு- இடிந்து தரைமட்டமான பழமையான வீடு

Published : Sep 15, 2019 7:57 PM

கங்கை நதியில் வெள்ளப்பெருக்கு- இடிந்து தரைமட்டமான பழமையான வீடு

Sep 15, 2019 7:57 PM

உத்திரபிரதேசத்தில் கங்கை நதிக்கரையோரம் இருந்த பழமையான வீடு ஒன்று இடிந்து தரைமட்டமாகும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. உத்திரபிரதேசம் மாநிலம் பல்லியா (ballia) மாவட்டம் பைரியா தெஹ்சில் (Bairia Tehsil) பகுதில் உள்ளது கெஹர்பூர் (Keharpur) என்ற கிராமம்.

கங்கை நதிக்கரையோரம் அமைந்துள்ள இந்த கிராமத்தில் இருந்த பழமையான வீடு ஒன்று இடிந்து தரைமட்டமானது. இதனால், அப்பகுதி முழுவதும் புழுதிகளமாக காட்சியளித்தது. வடமாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் கங்கை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரைபுரண்டோடுகிறது.

கங்கை நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஆற்றங்கரையோரம் இருந்த பழமையான வீடு தரைமட்டமானது. வீடு இடிந்து விழும் சுமார் 30 நிமிடம் கொண்ட இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. வீடு தரைமட்டமான நிலையில், உயிர் சேதங்கள் எதுவும் இல்லை என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.