​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஜம்மு காஷ்மீரை பிரகாசிக்க செய்ய வேண்டும் என மோடி அறிவுறுத்தினார் - ஆளுநர் சத்யபால் மாலிக்

Published : Sep 15, 2019 7:29 PM

ஜம்மு காஷ்மீரை பிரகாசிக்க செய்ய வேண்டும் என மோடி அறிவுறுத்தினார் - ஆளுநர் சத்யபால் மாலிக்

Sep 15, 2019 7:29 PM

ஜம்மு காஷ்மீர் ஆளுநராகத் தான் பதவியேற்றபோது, அந்த மாநிலத்தை பிரகாசிக்க செய்ய வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியதாக, ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார்.

மேலும், மாநிலம் சிறப்பான வளர்ச்சி அடைந்தால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மக்கள் எல்லைத் தாண்டி இங்கு வர விரும்புவார்கள் என்றும், இதுதான் தாங்கள் விரும்பிய காஷ்மீர் என அவர்கள் சொல்லும் நிலையை உருவாக்க வேண்டும் என்றும் பிரதமர் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மக்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைக்குமாறு வலியுறுத்தி வரும் மத்திய அரசு, அவர்களுக்கு உதவ ஆர்வமாக இருப்பதாக சத்யபால் மாலிக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் எந்த மாநிலத்துக்கும் வழங்காத வகையில் இந்த ஆண்டு மட்டும் ஜம்மு காஷ்மீருக்கு 8 மருத்துவக் கல்லூரிகளை மத்திய அரசு வழங்கியுள்ளது என்றும் விரைவில் 4 ஆயிரத்து 500 மருத்துவர்கள் நியமிக்கப்படவுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு இதற்கு முன் ஆட்சி செய்த அரசைவிட தான் சிறப்பாக பணியாற்றியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.