​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பள்ளிக்குள் புகுந்த மழைநீர் - இரவு முழுவதும் சிக்கிதவித்த மாணவர்கள், ஆசிரியர்கள்

Published : Sep 15, 2019 6:45 PM

பள்ளிக்குள் புகுந்த மழைநீர் - இரவு முழுவதும் சிக்கிதவித்த மாணவர்கள், ஆசிரியர்கள்

Sep 15, 2019 6:45 PM

ராஜஸ்தானில் அரசு பள்ளிக்குள் மழைநீர் புகுந்ததால் அங்கிருந்து வெளியேற முடியாமல் மாணவர்களும், ஆசிரியர்களும் இரவு முழுவதும் வகுப்பறையிலேயே சிக்கித்தவித்தனர்.

ராஜஸ்தானில் பெய்து வரும் கனமழையால் அம்மாநிலத்தில் உள்ள  நீர் நிலைகள் நிரம்பி, எங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. பல இடங்களில் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு, அன்றாட பணிகளை மேற்கொள்ள முடியாமல் மக்கள் பெரும் சிரமத்திற்கும் ஆளாகி வருகின்றனர்.

இந்நிலையில், கனமழையால் சிட்டோர்கர் மாவட்டத்தில் உள்ள ராணா பிரதாப் அணை நிரம்பியதால், உபரி நீர் திறந்துவிடப்பட்டள்ளது. அணையில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீர் அருகே உள்ள அரசு பள்ளியில் புகுந்ததுடன், சாலைப்போக்குவரத்தையும் துண்டித்துள்ளது.

இதனால், பள்ளியில் இருந்து வெளியேற முடியாமல் தவித்த 350 மாணவர்கள் மற்றும் 50 ஆசிரியர்கள் பள்ளியிலே தங்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். இரவு முழுவதும் பள்ளியிலே தஞ்சமடைந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் அப்பகுதியில் இருந்த மக்கள் உணவு சமைத்துக் கொடுத்து, அவர்களின் பசியை போக்கினர்.