​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குடியிருப்புகளுக்கு அருகே கிடந்த 120 எம்.எம். பீரங்கிக் குண்டு

Published : Sep 15, 2019 5:06 PM

குடியிருப்புகளுக்கு அருகே கிடந்த 120 எம்.எம். பீரங்கிக் குண்டு

Sep 15, 2019 5:06 PM

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் குடியிருப்புகளுக்கு அருகே கிடந்த பீரங்கிக் குண்டை மீட்ட ராணுவ வீரர்கள், பாதுகாப்பாக செயல் இழக்க வைத்தனர். பூஞ்ச் மாவட்டம் மெந்தர் அருகே பாலகோட் என்ற கிராமத்தில், சிறிய ரக 120 எம்.எம். பீரங்கி குண்டு ஒன்று கிடந்தது.

இதுதொடர்பாக ராணுவ வீரர்களுக்கு ஊர் மக்கள் தகவல் கொடுத்தனர். இதை அடுத்து அங்கு சென்ற வீரர்கள், பீரங்கி குண்டை பாதுகாப்பாக மீட்டனர். பின்னர் அதன் மீது மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து, பாதுகாப்பாக வெடிக்கச் செய்தனர்.

எல்லையில் அத்துமீறும் பாகிஸ்தான் ராணுவம், எல்லை ஓரம் உள்ள கிராமங்களை குறிவைத்து தாக்குவதும், அப்படி தாக்கும் போது, இதுபோன்ற வெடிபொருட்கள் வந்து விழுவதும் வாடிக்கையான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.