​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பேனர் விழுந்து இளம்பெண் உயிரிழந்த வழக்கில் அதிமுக பிரமுகர் பெயர் சேர்ப்பு

Published : Sep 15, 2019 1:37 PM

பேனர் விழுந்து இளம்பெண் உயிரிழந்த வழக்கில் அதிமுக பிரமுகர் பெயர் சேர்ப்பு

Sep 15, 2019 1:37 PM

சென்னை பள்ளிக்கரணை அருகே திருமண வரவேற்பு பேனர் அறுந்து விழுந்து இளம்பெண் உயிரிழந்த வழக்கில் முன்னாள் கவுன்சிலரும் அதிமுக பிரமுகருமான ஜெயகோபால் பெயர் எப்.ஐ.ஆரில் சேர்க்கப்பட்டுள்ளது.

சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி சுபஸ்ரீ, கடந்த 12 ஆம் தேதி பணிக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அதிமுக பிரமுகர் ஜெயகோபால் இல்ல திருமண நிகழ்ச்சிக்காக சாலையின் நடுவே விளக்கு கம்பத்தில் கட்டப்பட்டு இருந்த வரவேற்பு பேனர் அறுந்து சுபஸ்ரீ மீது விழுந்தது.

இதில் நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த சுபஸ்ரீ, பின்னால் அதிவேகமாக வந்த லாரியில் சிக்கி உயிரிழந்தார். ஏற்கனவே லாரி ஓட்டுநர் மீது விபத்து மூலம் உயிரிழப்பு ஏற்படுத்துதல் மற்றும் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவது ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து பரங்கிமலை போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சி அடிப்படையில் பேனரால் தான் உயிரிப்பு ஏற்பட்டது என்பது உறுதியானதால் அதிமுக பிரமுகர் ஜெயகோபாலின் பெயரையும் எப்.ஐ.ஆரில் பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சேர்த்துள்ளனர்.