​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஸ்பெயின் நாட்டில் பெய்த வரலாறு காணாத மழை

Published : Sep 15, 2019 11:32 AM

ஸ்பெயின் நாட்டில் பெய்த வரலாறு காணாத மழை

Sep 15, 2019 11:32 AM

ஸ்பெயின் நாட்டில், தொடர் மழை காரணமாக கட்டிடங்களுக்குள் தேங்கிய வெள்ளத்தை ராணுவ வீரர்கள் ராட்சத குழாய்கள் மூலம் வெளியேற்றி வருகின்றனர்.

ஸ்பெயின் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத மழை பெய்தது. இதனால் சாலைகள், வீடுகள் மற்றும் அடுக்குமாடி கட்டிடங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. வாகனங்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. மேலும் கனமழையில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்.

சுமார் 3,500 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டதோடு, தற்காலிகமாக அங்குள்ள ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.

இந்நிலையில் மழை சற்று ஓய்ந்து இயல்பு வாழ்க்கை திரும்ப தொடங்கியுள்ளது. தேங்கியிருக்கும் மழை காரணமாக தொற்று நோய்கள் ஏற்படுவதை தவிர்க்க ஊழியர்கள், கட்டிடங்களிலிருந்து நீரை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் அந்நாட்டு ராணுவ வீரர்களும் இணைந்து, ராட்சத குழாய்கள் உதவியுடன் கட்டிடத்தின் கீழ் தளங்களில் தேங்கிய நீரை வெளியேற்றி வருகின்றனர்.