​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஸ்பெயினில் மழை வெள்ளத்திற்கு 5 பேர் உயிரிழப்பு

Published : Sep 15, 2019 7:53 AM



ஸ்பெயினில் மழை வெள்ளத்திற்கு 5 பேர் உயிரிழப்பு

Sep 15, 2019 7:53 AM

ஸ்பெயினில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய கார்கள் சாலை ஓரத்தில் குப்பை போல கிடக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.

தென்கிழக்குப் பகுதியான அலிகான்டே மாகாணத்தில் அண்மையில் தொடர்ச்சியாக 2 நாள்கள் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் அந்த மாகாணத்தின் பெரும்பாலான இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. வீடுகள், பிரமாண்ட கட்டடங்கள் அனைத்தும் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. வெள்ளத்தில் சிக்கி இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட கார்கள் சாலையோரத்தில் குப்பை போல குவிந்து கிடக்கின்றன. 100க்கும் அதிகமான கார்களும், மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வாகனமும் வெள்ளத்தில் சிக்கி சாலையோரத்தில் கிடக்கும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.