​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பிரதமர் மோடி நர்மதா அணைக்கரையில் கட்டப்பட்டுள்ள பட்டேல் சிலையை பார்வையிடுகிறார்

Published : Sep 15, 2019 7:00 AM

பிரதமர் மோடி நர்மதா அணைக்கரையில் கட்டப்பட்டுள்ள பட்டேல் சிலையை பார்வையிடுகிறார்

Sep 15, 2019 7:00 AM

பிரதமர் மோடி தமது 69 வது பிறந்தநாளான வரும் 17ம் தேதி சர்தார் சரோவர் அணையை பார்வையிடுகிறார்.

நர்மதா நதியின் மீது கட்டப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணை அருகே சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு பிரம்மாண்டமான  சிலை அமைக்கப்பட்டுள்ளது. நர்மதா நதியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் அணை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் கூடுதலாக நீர் திறக்கப்பட்டுள்ளது.

அணை தனது முழு கொள்ளளவை எட்டியதைக் கொண்டாடும் வகையில் மகா உத்சோவ் விழாவை குஜராத் அரசு அறிவித்துள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க ஒப்புதல் அளித்துள்ளதாக குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.