​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கடந்த 3 நாட்களாக மத்திய பிரதேசத்தில் வெளுத்து வாங்கும் கனமழை

Published : Sep 14, 2019 8:02 PM

கடந்த 3 நாட்களாக மத்திய பிரதேசத்தில் வெளுத்து வாங்கும் கனமழை

Sep 14, 2019 8:02 PM

மத்தியப் பிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது.

மத்தியப் பிரதேச மாநிலம் மன்சார் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. வீடுகளை இழந்தோரை மீட்புக் குழுவினர் நிவாரண முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.

இதுவரை உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர் மழையால் மன்சார் மாவட்டத்தில் உள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் வெள்ளநீர் புகுந்தது.

இதனால் நோயாளிகள் கடும் அவதியடைந்துள்ளனர். தார், புர்ஹான்பூர், கந்த்வா, கார்கோன், அலிராஜ்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் நலன் கருதி கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் மழை மற்றும் வெள்ளப்பெருக்கால் மத்திய பிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ரெட் அலர்ட் என்பது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் வகையிலும், அடிப்படைத் தேவைகளை அடைய முடியாத நிலை ஏற்படும் வகையிலும் பாதிப்பு இருக்கும் என்கிற எச்சரிக்கையாகும்.