​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திமுக சார்பில் முப்பெரும் விழா: பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள் இன்றி தயாராகும் விழா மேடை

Published : Sep 14, 2019 6:57 PM

திமுக சார்பில் முப்பெரும் விழா: பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள் இன்றி தயாராகும் விழா மேடை

Sep 14, 2019 6:57 PM

திருவண்ணாமலையில் திமுக சார்பில் நடைபெற உள்ள முப்பெரும் விழாவில் பேனர்கள் கட்டவுட்டுகள் இன்றி ((இயற்கை முறையில்)) பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி  திமுக சார்பில் திருவண்ணாமலை மாவட்டம் சாரோன் பகுதியில் உள்ள கலைஞர் திடலில் நாளை முப்பெரும் விழா நடைபெற உள்ளது.

விழாவிற்கு கோட்டை வடிவில் முகப்புத் தோற்றமும், பிரம்மாண்டமான மேடை அமைக்கும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. காலை முதல் மாலை வரை நடைபெறும் இந்த விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம் உள்ளிட்டவைகள் இடம்பெற உள்ளன. மாலை 5 மணியளவில் திமுக தலைவர் ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். இந்த நிலையில் விழா நடைபெறும் இடத்தை முன்னாள் அமைச்சர் எ.வ வேலு ஆய்வு மேற்கொண்டார்.

பந்தல் அமைப்பு, முக்கிய விருந்தினர்கள் அமரும் இடம், குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.  விழா நடைபெறும் பகுதியில் மருத்துவ சிகிச்சைக்காக இடவசதி செய்யப்பட்டுள்ளது. நூலகம், கண்காணிப்புக் கருவிகள் உள்ளிட்டவைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பந்தல் அமைப்பாளர் சிவா, திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள் எதுவும் பயன்படுத்த கூடாது என உத்தரவிட்டதன் பேரில் தென்னை, வாழை, இளநீர், நெல் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு  ஆர்கானிக் முறையில் பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.