​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்திய நடவடிக்கைகளால் பயங்கரவாதம் மேலும் தீவிரவாதம் வளரும் - இம்ரான்கான்

Published : Sep 14, 2019 4:09 PM

இந்திய நடவடிக்கைகளால் பயங்கரவாதம் மேலும் தீவிரவாதம் வளரும் - இம்ரான்கான்

Sep 14, 2019 4:09 PM

காஷ்மீர் மீதான இந்தியாவின் நடவடிக்கையால் பயங்கரவாதம் மேலும் வளரும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முசாபராபாத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், காஷ்மீர் விவகாரம் ஒரு சர்வதேச பிரச்சனை என்றார். காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்துள்ளது, அந்த மாநிலத்தை 2 ஆக பிரித்து யூனியன் பிரதேசங்களாக மாற்றியுள்ளது என்ற அவர், காஷ்மீரில் இந்தியா மேற்கொள்ளும் இத்தகைய நடவடிக்கையால், அங்கு பயங்கரவாதம் மேலும் வளரும் என்றார்.

அடுத்த வாரம் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாக கூறிய அவர், அப்போது காஷ்மீர் விவகாரம் குறித்து கடந்த காலங்களில் யாரும் செய்யாத வகையில் உரிமைகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்கப்படும் என்றார்.