​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விவசாய நிலங்களில் ஓஎன்ஜிசி குழாய் பதிக்க விவசாயிகள் எதிர்ப்பு

Published : Sep 14, 2019 3:30 PM

விவசாய நிலங்களில் ஓஎன்ஜிசி குழாய் பதிக்க விவசாயிகள் எதிர்ப்பு

Sep 14, 2019 3:30 PM

சீர்காழி அருகே ஓ.என்.ஜி.சி குழாய் பதிக்கும் பணியை விவசாயிகள் தடுத்து நிறுத்தி அதிகாரிகளையும் தாக்கியதால் பரபரப்பு நிலவியது.

நாகை மாவட்டம் சீர்காழி அருகே திருநகரியில் ஓ.என்.ஜி.சி குழாய் பதிக்கும் பணி விவசாய நிலங்களில் நடைபெற்று வருகிறது. மாதானம் முதல் நரிமணம் வரை சுமார் 100 கிலோ மீட்டர் தூரத்திற்கு குழாய் பதிக்கப்படுவதால், விவசாய பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

சம்பா சாகுபடிக்காக காவிரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்ட போதும் விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் விவசாய நிலங்களில் குழாய் பதிக்கும் பணியை விவசாயிகள் இன்று தடுத்து நிறுத்தினர்.

தகவலறிந்து சென்ற ஓ.என்.ஜி.சி அதிகாரிகள் விவசாயிகளை தரக்குறைவாக பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் அதிகாரிகளை சரமாரியாகத் தாக்கினர்.

சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் விவசாய பணிகளை மேற்கொள்ள குழாய் பதிக்கும் பணியை விரைந்து முடித்து விவசாயிகளுக்கு ஆதரவளிக்குமாறு அதிகாரிகளை அறிவுறுத்தியதை அடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.