​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சீட்பெல்ட் அணியாத காவல்துறை வாகனத்தை மறித்து வாக்குவாதம் செய்த பொதுமக்கள்

Published : Sep 14, 2019 2:55 PM



சீட்பெல்ட் அணியாத காவல்துறை வாகனத்தை மறித்து வாக்குவாதம் செய்த பொதுமக்கள்

Sep 14, 2019 2:55 PM

பீகார் மாநிலத்தில் சீட்பெல்ட் அணியாமல் சென்ற காவல்துறையினரின் வாகனத்தை பொதுமக்கள் மறித்து வாக்குவாதம் செய்தனர்.

நாடாளுமன்றத்தில் புதிய போக்குவரத்து சட்டவிதிகளை இயற்றிய பிறகு, வாகன ஓட்டிகளின் போக்குவரத்து விதிமீறல்கள் அனைத்திற்கும் காவல்துறையினர் கட்டாய அபராதம் விதித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பீகார் மாநிலம் முசாஃபர்பூர் பகுதியில், சீட்பெல்டு அணியாத காவல்துறையினரின் காரை பொதுமக்கள் மறித்து நிறுத்தினர்.

பொதுமக்கள் கூட்டமாக மறித்ததையடுத்து, வாகனம் ஓட்டிய காவலர் உடனடியாக சீட்பெல்ட் அணிந்தார்.

பொதுமக்கள் சரமாரியாக கேள்வி எழுப்பியதையடுத்து, காவல்துறையினர் தங்களது காரை வேகமாக எடுத்து சென்றனர்.