​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி, அண்ணா பதக்கங்கள் அறிவிப்பு

Published : Sep 14, 2019 12:39 PM



பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி, அண்ணா பதக்கங்கள் அறிவிப்பு

Sep 14, 2019 12:39 PM

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி, 130  பேருக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை, சிறைத்துறை, ஊர்க்காவல் படை, தமிழ்நாடு விரல்ரேகைப் பிரிவு  அலுவலர்கள் மற்றும் தடய அறிவியல் துறை அறிஞர்கள் சிறப்பாக பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையில் இந்த பதக்கம் வழங்கப்படுகிறது.

காவல் துறையில் காவல் கண்காணிப்பாளர் முதல் முதல்நிலை காவலர் வரையிலான 100 அலுவலர்களுக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறையில்  மாவட்ட அலுவலர் முதல் தீயணைப்பு வீரர் நிலை வரையிலான 10 அலுவலர்களுக்கும் இந்த ஆண்டு பதக்கம் வழங்கப்படுகிறது.

சிறைத்துறையில் துணை சிறை அலுவலர் முதல் முதல்நிலை சிறைக்காவலர் வரையிலான 10 அலுவலர்களுக்கும், ஊர்க்காவல் படையில்  மண்டல தளபதி முதல் பிரிவு தலைவர் வரையிலான 5 அலுவலர்களுக்கும் அண்ணா பதக்கம் வழங்கப்படுகிறது.

விரல்ரேகைப் பிரிவில் 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களுக்கும் மற்றும் தடய அறிவியல் துறை துணை இயக்குநர் ஒருவர் மற்றும் ஒரு அறிவியல் அலுவலருக்கு அண்ணா பதக்கம் வழங்கப்படுகிறது. பதக்கங்கள் பெறுகின்ற அலுவலர்களுக்கு அவரவர்  பதவிக்கேற்றவாறு, மானியத் தொகையும் வெண்கல பதக்கமும் அளிக்கப்படும்.

தமிழக முதலமைச்சரின் வீரதீர செயலுக்கான காவல் பதக்கம், மணல் திருட்டை தடுக்கும்பொழுது தன்னுயிர் நீத்த முதல் நிலைக் காவலர் எஸ்.ஜெகதீஷ் துரைக்கு  வழங்கப்படுகிறது. அவரது குடும்பத்திற்கு பண வெகுமதி 5 லட்ச ரூபாய் வழங்கப்படும்.  பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளவர்களுக்கு பின்னர் நடைபெறும்  விழா ஒன்றில், முதலமைச்சர் பதக்கங்களை வழங்குவார்.