​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பிணியாக்கிய அரசு பள்ளி ஆசிரியர் கைது

Published : Apr 27, 2018 5:40 PM

15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பிணியாக்கிய அரசு பள்ளி ஆசிரியர் கைது

Apr 27, 2018 5:40 PM

மதுரை அருகே உறவினரின் மகளை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பிணியாக்கிய அரசு பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர். திருப்பரங்குன்றம் பாம்பன் நகரைச் சேர்ந்த பிரேம் நசீர், பெருங்குடி அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

பார்வைத்திறன் குறைபாடு உள்ள அவருக்கு உதவியாக அவரது உறவினரின் 15வயது மகள் வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில் கடந்த நில நாட்களுக்கு முன் அச்சிறுமிக்கு வயிற்றுவலி ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

அவரிடம் விசாரித்தபோது ஆசிரியர் பிரேம் நசீர் மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக சிறுமியின் தந்தை அளித்த புகாரையடுத்து ஆசிரியர் பிரேம்நசீர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.