​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சுரங்கத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விடிய விடிய சோதனை

Published : Sep 14, 2019 8:47 AM

சுரங்கத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விடிய விடிய சோதனை

Sep 14, 2019 8:47 AM

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரகத்தில் இயங்கி வரும் புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசார் இரவு முழுவதும் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கின.

இந்த அலுவலகத்தில் மணல் கொள்ளைக்கு துணையாக இருத்தல், ஏரிகளில் மண் எடுக்க அனுமதி அளித்ததில் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தன. இதனை அடுத்து சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஎஸ்பி சீனிவாச பெருமாள் தலைமையில் 7 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் நேற்று பிற்பகல் 3 மணிமுதல் அந்த அலுவலகம் சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். 

சோதனையின் போது திருவள்ளூர் மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர் சீனிவாசராவ்  லஞ்ச ஒழிப்புத் துறை  அதிகாரிகளின் கேள்விகளுக்கு  முறையாக பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அலுவலகத்தில் இருந்து முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாகவும்,  மடிக்கணினி, செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்த தாகவும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் சீனிவாச ராவ் செல்போனில் குவாரி சம்மந்தமாக பலதரப்பட்ட நபர்களிடம் பேசிய ஆடியோ விவரங்கள்,  வங்கி பணபரிவர்த்தனை ஆகியவை இருப்பதால் அதனை முழு சோதனை செய்த பிறகே  உண்மை நிலவரம் தெரியவரும் என்றும்  லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி இரவு முழுவதும் நடைபெற்ற இச்சோதனை காரணமாக  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.