​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இடியுடன் கூடிய மிதமான மழை பெய்தது

Published : Sep 14, 2019 8:29 AM



தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இடியுடன் கூடிய மிதமான மழை பெய்தது

Sep 14, 2019 8:29 AM

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இடியுடன் கூடிய மிதமான மழை பெய்தது.

அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மாலையில் மழை பெய்துவருகிறது. அரியலூர், செந்துறை, வாரணவாசி உள்ளிட்ட இடங்களில் நேற்று பலத்த மழை பெய்தது. விவசாயத்திற்கு இந்த மழை பயனுள்ளதாக இருக்கும் என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. கடும் வெயிலுக்கு இடையே பரவலான இடங்களில் திடீரென மழை பெய்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் வெயில் வாட்டி வதைத்தது. இந்நிலையில் நேற்றிரவு சுமார் அரைமணி நேரம் மழை பெய்தது.

இதேபோல் நாகை மாவட்டம் சீர்காழி, கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது.

 

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது, மேலும் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழைக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.