​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாரிடம் சிபிஐ விசாரணை

Published : Sep 14, 2019 7:49 AM

கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாரிடம் சிபிஐ விசாரணை

Sep 14, 2019 7:49 AM

கொல்கத்தாவின் முன்னாள் காவல்துறை ஆணையர் ராஜீவ் குமார் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் கைது செய்வதற்கு தடையுத்தரவு பெற்றிருந்த ராஜீவ்குமார் மீதான தடையை நேற்று நீதிமன்றம் விலக்கிக் கொண்டது. இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்தினர்.

அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் சம்மன் அனுப்பி அவரை விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்திருந்தது. அப்போது ராஜீவ் குமாரின் வீட்டிற்கே சென்ற மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சிபிஐ நடவடிக்கையை கண்டித்து கட்சித் தொண்டர்களுடன் போராட்டத்தையும் நடத்தினார்.

சாரதா குழுமத்தின் 2460 கோடி ரூபாய் தொடர்பான மோசடி வழக்கில் ராஜீவ் குமாரின் பெயரை குற்றவாளிகள் பட்டியில் சேர்த்துள்ள சிபிஐ அவருக்கு வழங்கப்பட்ட சிவப்பு டைரி மற்றும் பென்டிரைவ் குறித்து விசாரணை நடத்தினர்.

2013ம் ஆண்டு மம்தா அரசால் அவருக்கு வழங்கப்பட்ட டைரியையும் பென்டிரைவையும் சிபிஐ அதிகாரிகள் சாரதா நிறுவனத்தை சோதனையிட்ட போது பறிமுதல் செய்துள்ளனர். இந்த டைரியிலும் பென்டிரைவிலும் யார் யாருக்கு சாரதா நிதி நிறுவனத்தின் பணம் கொடுக்கப்பட்டது என்ற விவரம் அடங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

இதில் திரிணாமூல் காங்கிரஸ் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களும் சிக்கியுள்ளனர். ஒரு அமைச்சர் உள்பட இருவர் ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.